Home India Sports இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் சாதனை.

இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் சாதனை.

0

ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 14-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் அணி 236 ரன்கள் முன்னிலையுடன் விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜாகிர் ஹசன்54 ரன்னிலும் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 54 ரன்னிலும் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான்டோ சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முன்னாள் வங்காளதேச கேப்டனான மோமினுலுடன் அவர் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2018-ம் ஆண்டு சிட்டகாங்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் மோமினுல், முதல் இன்னிங்சில் 176 ரன்களும் 2-வது இன்னிங்சில் 105 ரன்களை எடுத்திருந்தார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்த முதல் பேட்டர் ஷான்டோ ஆவார். இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷான்டோவின் நான்காவது சதமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version