ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோ படமென்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையிப் டிசி கேரக்டரை மையமாக கொண்டு இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் தி ப்ளாஷ்.
ஆலன்(ப்ளாஷ்) அம்மா மரணத்திற்கு பிறகு, மிகுந்த தனிமையில் வாழ்ந்து வருகிறார், புருஷ் வெயின் வழிகாட்டுதலில் அவர் வாழ்க்கை போக, அதே நேரத்தில் தன் அம்மாவை தன் அப்பா கொல்லவில்லை என்ற உண்மையை நிரூபிக்க நீதிமன்றத்திலும் போராடி வருகிறார்.
அந்த சமயத்தில் அவரால் கடந்த காலத்திற்கு செல்லும் வழி ஒன்று தெரிகிறது, டைம் ட்ராவல் செய்து தன் அம்மாவை காப்பாற்றலாம் என்று நினைக்கிறார், அதன் படியே காப்பாற்றுகிறார்.
ஆனால், அவர் அந்த டைம் லைனிலேயே மாட்டிக்கொள்ள, பல குளறுபடிகள் நடக்கின்றது, ஒரே இடத்தில் இரண்டு ப்ளாஷ், உலகத்தை அழிக்க ஜாட் வர, இதையெல்லாம் முறியடித்து மீண்டும் டைம் லைனை ப்ளாஷ் சரி செய்தாரா என்பதே மீதிக்கதை.
மார்வல் மல்டிவெர்ஸ் கான்செப்டில் டிகிரி முடிக்க, டிசி தற்போது தான் எல் கே ஜி சென்றுள்ளது. ஆனால், எல் கே ஜி-யிலே ஹையர் ஸ்டெடிஸ் முடித்தது போல் மிரட்டியுள்ளனர்.
அதிலும் பழைய பேட்மேன் மைக்கில் கொண்டு வரும் காட்சிகள் எல்லாம் டிசி ரசிகர்களுக்கு சரவெடி விருந்து. படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி மிரட்டல், பென் அப்ஃலக் ஆக வரும் பேட்மேன்-உடன் சேர்ந்து ஆலன் செய்யும் சாகசம் விசில் பறக்கின்றது.
அதுவும் குழந்தைகளை காப்பாற்றும் காட்சி செம, டைம் லைன் குறித்து நூடல்ஸ் வைத்து விளக்கும் காட்சி இயக்குனருக்கு சபாஷ், எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காக சாப்பாட்டிலிருந்து ஆரம்பித்தது நல்லது.
அதே நேரத்தில் அவர்கள் பேசும் சில வசனங்கள் அதாவது டைம் லைன் மாறியிருக்கிறது என்பதை பற்றிய காட்சிகள், ஹாலிவுட் படம் நிறைய பார்க்கதவர்களுக்கு குழப்பம் தான் வரும்.
படத்தில் ஒரு சில கதாபாத்திரம் தவிற, பல கதாபாத்திரங்களின் ரைட்டிங் சுமாராகவே உள்ளது, அதிலும் ஏதோ வில்லன் என்று ஒருவரை வைக்க வேண்டும் என்பதற்காக ஜாட்-யை காட்டியது போல் இருந்தது.
சூப்பர் கேர்ள் ஆக வரும் சாஷா-வும் அழகாக இருக்கிறாரே தவிற, அர்ப்புதங்களை எதும் நிகழ்த்தவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் பலவீனம், பின்னணி இசை சிறப்பு.
கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பின்னணி இசை படத்தின் பலம், இதையெல்லாம் தாண்டி மொத்த படத்தையும் தாங்கி நிற்பது எர்ஷா மில்லர் தான், பல சர்ச்சைகளிலிருந்து இந்த படம் அவரை மீட்டு எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.