சூப்பர் சிங்கர் 9வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வித்தியாசமாக ஒவ்வொரு வாரமும் பிரபல இசையமைப்பாளர்களை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து அசத்துகிறார்கள்.
மக்களும் இந்த 9வது சீசனிற்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா மற்றும் பிரசன்னா என 5 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இந்த 5 பேரில் 9வது சீசன் வெற்றியாளராக ஆகப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வாரம் இளையராஜா சுற்று நடந்துள்ளது, நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கங்கை அமரன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
மாகாபா ஆனந்த் வழக்கமாக எல்லோரையும் கலாய்ப்பது போல் கங்கை அமரன் இசையமைத்த பாடல் ஒன்றையும் கிண்டலாக கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கங்கை அமரன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் புரொமோவை வெளியிடவில்லை.