Saturday, December 28, 2024
HomeIndiaஇரண்டு இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை.

இரண்டு இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை.

பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது. இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர்.

இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments