முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கையான முறையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபரின் கடமை அலுவலகத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புதுக்குடியிருப்பில் உள்ள முல்லைத்தீவு/ சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை எனும் ஆரம்ப பாடசாலையில் உள்ள அதிபர் கடமை அலுவலகம் முற்றிலும் மாறுபட்ட ஓர் அலுவலக அமைப்பு முறையுடன் விளங்குகின்றது.
அதாவது, பாடசாலை அதிபரின் கடமை அலுவலகமானது முற்று முழுதாக மர வேலைப்பாடுகள் மூலம் இயற்கையான முறையில் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலை அதிபரின் கடமை அலுவலகத்தின் அமைப்புக்களை பார்த்த பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.