பொதுவாக போட்டி நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கப்படும்.
ஆனால் விஜய் டிவி மற்றும் ஜீ டிவியில் வெற்றியாளரை தீர்மானித்துவிட்டு போட்டியை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
வழக்கமாக ரேட்டிங்கிற்காக விஜய் டிவி ஈழத் தமிழரை பைனல்வரை அனுமதித்துவிட்டு இறுதியாக பரிசு வழங்காமல் தவிர்ப்பார்கள்.
ஆனால் ஜீ டிவி ஒருபடி மேலே சென்று ஈழத் தமிழரை ரேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பைனல் வாய்ப்பே வழங்காமல் தவிர்த்துள்ளார்கள்.
மலடி பிள்ளை பெறும் அதிசயம் நிகழ்ந்திடாதா என எதிர்பார்த்தேன். ஆனால் வழக்கம்போல் இம்முறையும் ஏமாற்றத்தை தந்துள்ளனர்.
தமிழர் நடத்தாத டிவியில், தமிழர் நடுவராக இல்லாத மேடையில், ஈழத் தமிழர் திறமைக்கு பரிசும் மதிப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பது எம் முட்டாள்தனமே.