Home World Canada News கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல்.

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல்.

0

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.

அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றான IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை IDP Education அறிவித்துள்ளது .

அதன்படி IELTS தேர்வாளர்கள் ஆகஸ்ட் முதல் தேர்வின் அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6.0 புள்ளிகளை பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையானது வரும் ஆகஸ்ட் 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு முறை ஒரு பரீட்சையில் தோன்றி கேட்டல்(Listening), பேசுதல்(Speaking),எழுதுதல்(Writing) மற்றும் வாசித்தல் (Reading) செய்து தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால் மீண்டும் அதை தேர்வு செய்து மதிப்பெண் தேவையான ஒரு தேர்வை மட்டுமே செய்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய முறையானது தற்போது கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version