விஜய் டிவி இந்த தொலைக்காட்சியில் நிறைய புத்தம் புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
பெரியவர்கள், சிறியவர்கள் என நிறைய சீசன்கள் ஒளிபரப்பானது, தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது இந்த 9வது சீசன் இறுதிக்கட்டததை நெருங்கி வருகிறது, இதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டியாளர்கள் உள்ளனர்.
இதுவரை அபிஜித், பூஜா, அருணா மற்றும் ப்ரியா ஆகியோர் இந்த சீசனின் Finalist ஆக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
கடைசியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 9வது சீசனின் 5வது போட்டியாளராக பிரசன்னா தேர்வாகியுள்ளார்.