Saturday, December 28, 2024
HomeWorldமன்னன் சார்லஸின் அணிவகுப்பு ஒத்திகை; 3 வீரர்கள் மயக்கம்!

மன்னன் சார்லஸின் அணிவகுப்பு ஒத்திகை; 3 வீரர்கள் மயக்கம்!

லண்டனில் மன்னன் சார்லஸின் பிறந்தநாளின் போது நடக்க உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது வெயில் தாங்காமல் வீரர்கள் 3 பேர் மயங்கிச் சரிந்தனர்.

எதிர்வரும் 17-ஆம் திகதி நடைபெற உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையை இளவரசர் வில்லியம் நேரில் பார்வையிட்டார்.

அப்போது வெயிலை தாக்குப்பிடிக்க இயலாத ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். மயங்கிய 2 பேர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர்.

கடும் வெயிலில் ஒத்திகையில் பங்கேற்ற அனைவருக்கும் இளவரசர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments