Home World Australia News ஆஸ்திரேலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி.

ஆஸ்திரேலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி.

0

ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஹண்டர் வேலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 பேரை ஏற்றுக்கொண்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கிரேட்டா நகரில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாதையிலிருந்து விலகி புரண்டு பள்ளத்திற்குள் விழுந்ததால் இந்தப் விபத்து நடந்துள்ளதாக சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் கூறுகிறார்கள். பஸ்ஸில் சிறுவர்கள் யாரும் பயணம் செய்திருக்கவில்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version