அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.