Home Cinema வருமா வராதா வாடிவாசல்.? வெறுத்துப்போன சூர்யா..

வருமா வராதா வாடிவாசல்.? வெறுத்துப்போன சூர்யா..

0

சூர்யா, விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் என்ற கேரக்டர் ஐந்து நிமிடமாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் பெரிய உச்சத்திற்கு போய்விட்டது. இதனை வைத்து இவருடைய அந்தஸ்து பல மடங்காக கூடிவிட்டது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் பத்து மொழிகளில் உருவாக்கி மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஏற்கனவே பல மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என்ற ஆவலாக மொத்த கூட்டமும் எதிர்பார்த்தது. தற்போது கங்குவா படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று ரொம்பவே எதிர்பார்ப்புடன் இவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இப்பொழுது போற போக்க பாத்தா வாடிவாசல் படம் வருமா வராதா என்று மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. இதைப் பற்றி வெற்றிமாறனிடம் கேட்டபொழுது அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறார். அத்துடன் தற்போது வெற்றிமாறனின் முழு கவனமும் விடுதலை படத்தின் பார்ட் 2.

இதனால் சூர்யாவை ரொம்ப அலட்சியம் செய்யும் விதமாக வாடிவாசல் படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் வெறுத்துப் போன சூர்யா இந்த இடைவெளிக்குள் ஒரு கமர்சியல் படத்தை கொடுத்து விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதற்காகத்தான் எப்போதுமே இவர் பக்கத்தில் தயாராக ஒரு இயக்குனரை கைவசம் வைத்திருக்கிறார்.

அவர்தான் இயக்குனர் ஹரி. இவர் மற்ற ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் எப்படி அமையும் அது தெரியலை. ஆனால் சூர்யாவுடன் இணைந்தால் அந்தப் படம் வெற்றி கூட்டணியாக தான் இருக்கும். இது இவருக்கு மட்டுமல்ல சூர்யாவிற்கும் பொருந்தும். அதனால் இவர்கள் கூட்டணியில் மறுபடியும் ஒரு படம் ஆரம்பிக்க இருக்கிறது.

ஹரி படம் என்றாலே சண்டை மற்றும் குடும்பங்கள் நிறைந்த காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. மேலும் சூர்யாவிற்கும் வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஒரு படத்தை கொடுத்தால் மட்டும்தான் அவருக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும். அதனால் இவர்கள் இணையும் அந்தக் கூட்டணியில் கண்டிப்பாக குடும்பங்களை கவரும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version