சுவிட்சர்லாந்தில் நீங்கள் ஒரு வீடு கொள்வனவு செய்ய விரும்பினால் சில விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது.
தற்போதைய சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இவ்வாறான வீடு ஒன்றை கொள்வனவு செய்வது என்பது தொடர்பில் பொதுவாக உங்களுக்கு எழும் ஐயப்பாடுகளுக்கு தீர்வாக சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வீடு ஒன்றுக்கு உரிமையாளராவது பலரின் கனவாக காணப்படுகின்றது.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் அது சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.
அடகு வட்டி வீத அதிகரிப்பு, வீடுகளுக்கான நிரம்பலில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை மோதல் நிலைமைகள் போன்ற பல்வேறு காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வது சற்றே சவாலான விடயமாக காணப்படுகிறது.
எவ்வாறெனினும் தற்போதைய காலச் சூழ்நிலையில் வீடு ஒன்றை அல்லது சொத்து ஒன்றை கொள்வனவு செய்வது சாதகமான தீர்வு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடு ஒன்றை கொள்ளளவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்
- நீங்கள் வீடு கொள்வனவு செய்ய விரும்பும் பகுதி அதில் காணப்படும் வீடுகள் வீட்டின் அமைப்பு போன்ற விடயங்களை பற்றி ஆராயவும்
- வீட்டிற்காக செலவிடப்படக்கூடிய தொகையை நிர்ணயம் செய்யவும்
- வீடே கொள்வனவு செய்வதற்காக எவ்வளவு அடகு கடன் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வங்கியுடன் கலந்து ஆலோசிக்கவும்
- உங்களுக்கு ஒரு வீடு பிடித்திருந்தால் சில வங்கிகளிடம் அந்த வீட்டின் பெருமதியை மதிப்பீடு செய்து கொள்ளவும்
- ஒரு நிறுவனத்துடன் அன்றி சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் நீங்கள் ஆலோசனை செய்யவும்
- ரியல் எஸ்டேட் முகவரிடம் எவ்வாறான கேள்விகளை கேட்க வேண்டும் என்பதற்கு ஆயத்தமாகிக் கொள்ளவும்
- வீட்டை பூரணமாக பார்வையிடவும் அறைகள், சமையலறை, பூங்கா பகுதி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நன்றாக கவனிக்கவும்
- வீட்டின் ஆவணம் தொடர்பில் சரியான கவனத்தை செலுத்தவும்
- ஆவணத்தின் அனைத்து விடயங்களையும் வாசித்து தெளிவாக புரிந்து கொள்ளவும்
- வீட்டை கொள்வனவு செய்தால் அதனை புனரமைக்க ஏதேனும் செலவுகள் இருந்தால் அந்த தொகையையும் கணக்கிடவும்.