பஹ்ரைன் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா பஹ்ரைன் ஷுரா கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்தோடு ஆதரவாக வாக்களிக்க, மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இனிமேல், கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது.