ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு, லிந்துலை – மட்டுக்கலைப் பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது
குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையே, இந்தப் போக்குவரத்து தடைக்கு காரணம் என லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, குறித்த மரத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிக நேரம் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.