Home India இந்தியாவிலிருந்து Cordelia கப்பல் இலங்கைக்கு தனது முதல் சர்வதேச பயணத்தை ஆரம்பித்தது!

இந்தியாவிலிருந்து Cordelia கப்பல் இலங்கைக்கு தனது முதல் சர்வதேச பயணத்தை ஆரம்பித்தது!

0

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் Cordelia Cruises MV Empress சொகுசு பயணிகள் கப்பல் சேவையானது தனது முதல் சர்வதேச பயணத்தை குறிக்கும் வகையில் இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இந்த சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (05) இந்தியாவில் உள்ள சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதுடன், விழாவில் இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சபானந்த சோனோவால் கலந்து கொண்டார். சென்னை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரும் இந்தக் கப்பல், இந்த கன்னிப் பயணம் தொடங்கும் முன், சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சோனோவால் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடல்சார் வர்த்தகத்தில் வாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு 3, 4 மற்றும் 5 இரவு பெக்கேஜ்களின் கீழ் பயணிக்க வாய்ப்பு உள்ளதுடன், இந்தக் கப்பல் நாளை (07) இலங்கையை வந்தடைய உள்ளது.

இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கசன்துறை ஆகிய மூன்று துறைமுகங்களுக்குச் செல்கிறது.

இந்த சொகுசு பயணிகள் கப்பல் 2,880 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதோடு ,   ஒரே நேரத்தில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

கப்பலை வரவேற்கும் விழாவும் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவும் இதில் பங்கேற்க உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version