Home Srilanka Politics மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம்!

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம்!

0

மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று வியாழக்கிழமை (01) பேச்சுவார்த்தை நடத்தினார். 

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான்,  மலையக மக்களின் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version