கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை கல்லூரிக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன் நிலை தடுமாறி தவறி கீழே வீழ்ந்தார். இதன் காரணமாக 80 வயதான பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவரது காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற (01) 921 பட்டதாரிகளுக்கான பட்டம் அளிப்பு மற்றும் ஒவ்வொருவருடனும் கைகுலுக்காக ஜனாதிபதி சுமார் ஒன்றரை மணி நேரம் நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர், பைடன் நலமாக உள்ளார் என்று உறுபடுத்தியுள்ளார்.