50 கிலோ கிராம் எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டது.அந்த விலை குறைப்புக்கு அமைவாக தற்போதைய 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையொன்றின் விலை 2,600 ரூபாவாகும்.