கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நாளை (02) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்புக்கு அமைவாக, இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து அறவிடப்படும் புதிய கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.