Home Srilanka Politics ஊடகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்கும்

ஊடகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்கும்

0

ஊடகங்கள் உண்மைத் தன்மை வாய்ந்ததும், துல்லியதுமான செய்திகளை அறிக்கையிடுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது. ஊடகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்கும். அச்சமின்றி உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க ஊடக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (01) நடைபெற்ற எதிர்க்கட்சியின் சர்வ கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் ஒளி, ஒலிபரப்பு அதிகாரசபை சட்ட மூலம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனநாயக விரோத செயற்பாடுகளை அமுல்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் செயற்திட்டத்தின் மற்றுமொரு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அதற்கமைய ஒளிஃஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தின் மூலம் ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஸ்தாபித்து நாட்டின் ஊடகங்களை நசுக்கி ஜனநாயகத்தை சூறையாடும் வகையில் புதிய சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.

குறித்த சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் 6 மாதங்களுக்கு மட்டுமே தொலைக்காட்சி நிறுவன உரிமம் செல்லுபடியாகும். அதன் பின்னர், தொலைக்காட்சி அலைவரிசைகள் வருடாந்தம் உரிமம் பெறும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட வேண்டியேற்படும்.

இந்த உரிமம் வழங்குவதில், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் அரசுக்கு ஆதரவானதா இல்லையா என்பது குறித்து ஆராயப்படும். இதன் அடிப்படையில் உரிமக் கட்டுப்பாடுகளை விதித்து ஊடக அடக்குமுறையின் புதிய அத்தியாயத்தை இந்நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனாக இந்த சட்ட வரைவை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது. இதன் மூலம் ஊடகங்கள் மீதான பாரிய அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு ஜனநாயகம் மீறப்படும். 

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் ஊடக அலைவரிசைகளை உருவாக்கும் செயற்பாடுகளே இதன் கீழ் இடம்பெறும்.நிறைவேற்றதிகாரம், சட்டமன்றம், நீதித்துறைக்குக்கு அடுத்ததாக நான்காவது அரசாங்கமாக கருதப்படும் சுதந்திர சுயாதீன  ஊடகங்கள் இதன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும். தேர்தல் வரைபடத்தை திருத்தியமைத்து நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தும் சட்ட மூலத்தை கொண்டு வர முயற்சி செய்து நாட்டு மக்களின் ஜனநாயகம் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறது.

ஊடக நிறுவனங்களையும் அடக்கு முறைக்குட்படுத்துவதற்கான சவாலை எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்து நீதிமன்றத்தின் உதவியுடன் இதனை தோற்கடிக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் குரல் எழுப்பவுவோம். எனவே ஊடக நிறுவனங்கள் உண்மைத் தன்மை வாய்ந்ததும், துல்லியதுமான செய்திகளை அறிக்கையிடுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது. ஊடகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்கும். அச்சமின்றி உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க ஊடக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version