Home Srilanka Politics அவுஸ்திரேலியாவை சேர்ந்த பௌத்த மதகுருவின் விமானப்பயணம் தாமதமானதால் சர்ச்சை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பௌத்த மதகுருவின் விமானப்பயணம் தாமதமானதால் சர்ச்சை

0

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மிகவும் மதிக்கப்படும் பௌத்தமதகுரு அஜான் பிராமின்  விமானப்பயணம் கொழும்பு விமானநிலையத்தில் பல மணிநேரம் தாமதமாகியமை குறித்து பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.

பிரதமர் தினேஸ்குணவர்த்தன கொழும்பு விமானநிலையத்தில் காணப்பட்டமை காரணமாகவே பௌத்தமதகுருவின் விமானப்பயணத்தை அதிகாரிகள் தாமதித்தனர் என முதலில் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவின்  பிரசன்னம் காரணமாகவே அவரது பயணம் தாமதமானது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பௌத்த மதகுரு சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூருக்கும் பின்னர் பேர்த்திற்கும் செல்வதற்காக  செவ்வாய்க்கிழமை   கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றுள்ளார்- விமானத்தில் ஏறுவதற்காக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் அவர் காத்திருந்துள்ளார்.

அமைச்சர் நிமால்சிறிபால டிசில்வாவும் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் காணப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு உதவிக்கொண்டிருந்த விமானநிலைய அதிகாரி அமைச்சரை விமானத்திற்குள் ஏற்றுவதற்காக அவருடன்  விமானத்திற்குள் சென்றுள்ளார்எனினும் அந்த அதிகாரி பௌத்தமதகுருவை விமானத்தில்  ஏற்ற மறந்துள்ளார்- மேலும் அவர் தாமதமாக வந்ததால் பௌத்தமதகுரு குறிப்பிட்ட விமானத்தில் ஏற முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பௌத்தமதகுரு அந்த விமானத்தை தவறவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – அவரது பயணம் 12 மணித்தியலாங்கள் தாமதமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version