நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 74 வயதுடைய நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு துல்ஹிரிய நீதிவான் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவிட்டுள்ளது.
பகல்நேர சிறுவர்கள் பராமரிப்பு நிலைய காப்பாளரின் கணவரான குறித்த சந்தேக நபர், காப்பகத்தில் பாதுகாப்புக்காக விடப்பட்டிருந்த நான்கு வயது சிறுமியொன்றே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நாங்கல்ல துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். 04 வயதான குறித்த சிறுமி சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.