இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் வட்டி விகிதங்கள் சுமார் 2.5 சதவீதத்தால் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை 250 அடிப்படை புள்ளிகளால் முறையே 13.00 வீதம் மற்றும் 14.00 வீதமாகக் குறைத்துள்ளதாக அறிவித்தது. இந் நிலையிலேய நிதி இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.