பாணந்துறை – வெகட பிரதேசத்தில் இளைஞனொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் புதன்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.
பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாள்வெட்டு தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞனைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இளைஞனை வாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.