யாழ்.தையிட்டியில் பொதுமக்களின் காணியில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டமைக்கு இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விகாரைக்கு எதிரப்பு தெரிவித்து பல போராட்டங்கள் சமீப காலத்தில் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 3ம் கட்டமாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.