உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற இடத்தைப் டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மீண்டும் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பெர்னால்ட் அர்னோல்டு நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் சரிந்தன. இதனால் அவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் கணக்கின்படி, தற்போது அர்னோல்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேசெக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளராகவும் எலோன் மஸ்க் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.