Home World ஈரானின் இரு பெண் பத்திரிகையாளர்கள் சிறையில்

ஈரானின் இரு பெண் பத்திரிகையாளர்கள் சிறையில்

0

கடந்தவருடம் செப்டம்பர்மாதம் மாசா அமினியின் மரணம் குறித்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்திய இருபெண் பத்திரிகையாளர்கள் ஈரானில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானின் பெண்பத்திரிகையாளர்கள் இருவரையுமே  அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.ஹாம் மிகான் செய்தித்தாளின்  இலாஹே முகமதி மஹ்சா அமினியின் இறுதிசடங்குகள் குறித்த செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது சிறையில் உள்ள அவர்  திங்கட்கிழமை ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின்  விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகளின் போது பெண் பத்திரிகையாளர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தங்கள் கட்சிக்காரர்களிற்கு ஆதரவாக வாதிடவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை தகுதிவாய்ந்த குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யவேண்டும் என என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மஹ்சா அமீனியின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டஷார்க் செய்தித்தாளின் நிலௌபர் ஹமேதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரும் ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

இரு பெண் பத்திரிகையாளர்களும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version