இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 286.12 ரூபாவிலிருந்து 282.22 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 301.50 ரூபாவிலிருந்து 297.40 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.81 ரூபாவிலிருந்து 283.07 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 298 ரூபாவிலிருந்து 296 ரூபாவாக குறைந்துள்ளது.
சம்பத் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 289 ரூபாவிலிருந்து 284 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 301 ரூபாவிலிருந்து 296 ரூபாவாக குறைந்துள்ளது.