14 வகை தொழிற்துறையினருக்கும், 18 வயதை தாண்டியவர்களுக்கும் புதிய வரி விதியொன்று இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி மாதாந்தம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 20,000 ரூபாவுக்கு மேல் பங்களிப்பு செய்கின்றவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு பெற வேண்டும்.
மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் உட்பட 14 வகை தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குகின்றனர்.
அதேபோல 31 டிசம்பர் 2023 இல் 18 வயதை அடைந்தவர்களும் வர்த்தமானி அறிவிப்பின்படி இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.