Home World நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 33 கிலோமீட்டர் (21 மைல்) ஆழத்தில் பதிவானதாக கூறியது.

இதன் காரணமாக நியூஸிலாந்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version