யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (27.05.2023) பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு குழாய் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மிருசுவில் மக்களால் நேற்றைய தினம் (30) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமி விழுந்து மரணித்த பாதுகாப்பற்ற கிணற்றை இடித்து மணல் நிரப்பி இளைஞர்கள் மூடியுள்ளனர்.
நேற்று மூன்தினம் திடீர் முடிவெடுத்த இளைஞர்கள், ஊர் மக்களின் நிதி உதவியை பெற்று இக்குழாய்க்கிணறு அமைத்து கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிருசுவிலைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் கிங்சிகா என்ற மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.