Home Srilanka Science இலங்கை தனியார் பேருந்தின் கட்டணம் குறைக்க முடியாது

இலங்கை தனியார் பேருந்தின் கட்டணம் குறைக்க முடியாது

0

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்கலம் ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், டயரின் விலை 100,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஒரு டயரை நிரப்புவதற்கு 25,000 ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக உராய்வு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில உதிரி பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டீசல் விலை குறைப்பின்படி பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பஸ் வருமானம் குறைந்த நிலையில், பஸ்களின் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version