2023 IPL கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய டைடன்ஸ் 20 ஓவர்களில் 214 ஓட்டங்களை 4 விக்கட் இழப்புக்கு பெற்றது. சென்னை துடுப்பாட ஆரம்பித்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு சென்னைக்கு 171 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை சார்பில் டெவோன் கொன்வே 47 ஓட்டங்களைப் பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த அணித்தலைவர் தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். சென்னை அணி துடுப்பாடி இறுதி ஓவரில் 14 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தது. இறுதி இரண்டு பந்துகளில் 6 மற்றும் 4 ஓட்டங்களைப் விளாசிய ஜடேஜா சென்னையை வெற்றிபெற செய்தார். இது சென்னை வெல்லும் 5ஆவது ஐபிஎல் கிண்ணமாகும்.