Home Srilanka Politics பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை 

பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை 

0

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும், மக்கள் சில்லறை காசுகளை மாற்றிக் கொண்டு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை இன்னும் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விடயம். அதன்படி, எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதன்படி, இதுவரை 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆனால் சில தரப்பினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை.

இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு இடமளிக்காவிட்டால், அவர்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version