இன்றைய தங்க விலைகொழும்பு, செட்டியார்த் தெருவில் தங்க விற்பனை விலை பெருமளவில் குறைந்திருப்பதாக, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நாளில் 24 கறட் தங்கம் பவுன் ஒன்று 162,000 ரூபாவாகவும், 22 கறட் தங்கம் பவுன் ஒன்று 148,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இலங்கையின் டொலர் விலை வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்த விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,943.21 டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கையில் மீண்டும் டொலர் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.