கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் இன்று பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.