Friday, December 27, 2024
HomeWorldஎவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன்முதலாக அடைந்தனர்.

இந்நிகழ்வின் 70 ஆவது இன்று கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏட்மன்ட் ஹில்லரி, டென்ஸிங் நோர்கே ஆகியோரின் மகனமாரும் கலந்துகொண்டனர்.

8,849 மீற்றர் (29,032 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த 70 வருடங்களில் 6,000 இற்கும் அதிகமானோர் அடைந்துள்ளனர். எனினும், ஏறுவதற்கு ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக அது காணப்படுகிறது.

கடந்த 70 வருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவ்வருடம் 12 பேர் உயிரிழந்துடன் மேலும் ஐவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments