வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நேற்று (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.89 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 303.26 ரூபாவாகவும் நிலவியது.கடந்த ஒருவார காலத்தில் அமெரிக்கா டொலர் ஒன்று 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங்க் பவுண்ட் விலையும் கடந்த 7 நாட்களில் 15 ரூபாவால் குறைவடைந்து, நேற்று (29) 357.32 ரூபாவாக பதிவாகி இருந்தது. எவ்வாறாயினும் இன்றைய தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.
வர்த்தக வங்கிகளில் இன்று (மே 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்ட அமெரிக்க டொலர் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.09 ரூபாவிலிருந்து 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302.53 ரூபாவிலிருந்து 303.55 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.03 ரூபாவிலிருந்து 288.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 301 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியின் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290 ரூபாவிலிருந்து 291 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302 ரூபாவிலிருந்து 303 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலர் விலை இன்னும் கூடுமா?, டொலர் பெறுமதி 290 ரூபாவை அடையும் போது, மத்திய வங்கி உள்நாட்டு சந்தையில் டொலர் கொள்வனவை ஆரம்பிக்கும் என்றும், அதனால் டொலர் விலை மீண்டும் கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டொலர் விலை ஓரேடியாக சரிவை தடுக்கவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ளவும் இலங்கை மத்திய வங்கி இவ்வாறு உள்நாட்டுச் சந்தையில் இருந்து டொலரை கொள்வனவு செய்கிறது. எனினும் டொலர் கொள்வனவை மத்திய வங்கி ஆரம்பித்துவிட்டதா? என்பது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாக்கப்படவில்லை.