21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் புதிய சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு பேரவை நடவடிக்கை எடுக்காதுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பிர் எதிர்க்கட்சிகளும் பல்வேறு இழுத்தடிப்புகளை செய்கின்றன. இவற்றை கருத்தில் கொள்ளாது அரசியலமைப்பு பேரவை செயல்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்பட்டு, அந்த அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியதன் நோக்கம் ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, ஆனால் நோக்கம் தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இருந்த காலப்பகுதியில், சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாயய ராஜபக்ஷ ஆகியவர்களின் ஆட்சி காலங்களில் உரிய வகையில் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை.ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற வசமாவதில் உள்ள தோல்வி நிலையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.