மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி கடுகதி ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ரயில் மஹவ நிலையத்தில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்ஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் மாடு ஒன்று ரயிலுக்கு குறுக்காக பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தையடுத்து குறித்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மஹவ புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (29) அதிகாலை 12.30 மணியளவில் மஹவ புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் தொழில்நுட்பக் கோளாறை சீர் செய்த பின்னர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு நோக்கி பயணிக்கத் ஆரம்பித்தது. இதனால் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.