Home World Australia News உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய, அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய, அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு 

0

லண்டன், ஓவலில் நடைபெறவுள்ள 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியை அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதி செய்துள்ளன.

இரு அணிகளும் போட்டிக்கான தங்களது இறுதி அணி வீரர்கள் விபரங்களை ஐசிசிக்கு நேற்று (28) சமர்ப்பித்துள்ளன. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது எதிர்வரும் ஜூன் 7 முதல் தெற்கு லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.

அனுபவம் வாய்ந்த சீமர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் இறுதி செய்யப்பட்ட 15 வீரர்கள் கொண்ட இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். காயம் அல்லது பிற காரணங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா 15 வீரர்கள் கொண்ட இந்த அணியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஐசிசி குழுவின் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்கிடையில், காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியதைத் தொடர்ந்து பிசிசிஐ பெயரிட்ட 15 வீரர்கள் கொண்ட அணியில் இந்தியா எந்த மாற்றமும் செய்யவில்லை. இருப்பினும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐ.பி.எல்.லில் அவரது சிறந்த சமீபத்திய திறன்களின் பின்னணியில் காத்திருப்பு வீரராக தாமதமாக அறிவிக்கப்பட்டார்.

நடப்பு ஐ.பி.எல்.லின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் 163.61 ஸ்டிரைக் ரேட்டில் 14 போட்டிகளில் 625 ஓட்டங்களை குவித்துள்ளார். அவர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக இந்தியாவுக்கான மூன்று காத்திருப்பு வீரர்களில் ஒருவராக இருப்பார், இடது கை ஆட்டக்காரர் ஏற்கனவே இங்கிலாந்துக்கான விசாவை வைத்திருப்பதால் உடனடியாக லண்டனுக்கு செல்லவும் முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் சக வெள்ளை பந்து நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருடன் இந்தியாவுக்கான காத்திருப்பு வீரர்களில் பட்டியலில் உள்ளார்.

அவுஸ்திரேலியா :- பேட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெ் காப்பாளர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட்,டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (மேலதிக விக்கெட் காப்பாளர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசேன், நாதன் லியோன், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித் ( உப தலைவர்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர்

காத்திருப்பு வீரர்கள் :- மிட்ச் மார்ஷ், மேத்யூ ரென்ஷா

இந்தியா :- ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எஸ். பாரத், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், சர்துல் தாகூர், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட், இஷான் கிஷான் (விக்கெட் காப்பாளர்)

காத்திருப்பு வீரர்கள் :- யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version