சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது விஜயத்தை நிறைவுசெய்து நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார்.
நேற்று இரவு 11.05 அளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.179 என்ற விமானத்தில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். குறித்த விஜயத்தில் ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.