குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் 1,000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, உலக வங்கியின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தில் மேலும் ஆயிரம் மாணவர் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய நிதி ஒதுக்கப்படும்.
பயிற்சிக் காலத்தில் மாணவர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பயிற்சி கொடுப்பனவை செலுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறதது.
ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் உலக வங்கி திட்டத்தில் இருந்து ஏற்கனவே பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் ஆயிரம் மாணவர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும் என நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.