இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.