இந்த வருட இறுதிக்குள் நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, எதிர்வரும் 2 வருடங்களில் 70 வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.