எலிசபெத் மகாராணியை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த தகவல்களை அமெரிக்காவின் எவ்பிஐ வெளியிட்டுள்ளது.1983ம் ஆண்டு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பிரிட்டிஸ் மகாராணி உயிராபத்துக்களை எதிர்கொண்டார் என எவ்பிஐ வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
எலிசபெத்மகாராணியின் மரணத்தை தொடர்ந்து அவரது 1983ம் ஆண்டிற்கான அமெரிக்க விஜயம் குறித்த ஆவணங்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது. ஐஆர்ஏயினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து கவலை கொண்டிருந்த எவ்பிஐ எலிசபெத் மகாராணியை காப்பாற்றிய விபரங்களை பகிர்ந்துகொண்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவருக்கு பிரிட்டிஸ்மகாராணியின் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்தவிபரங்கள் கிடைத்துள்ளனசான்பிரான்சிஸ்கோவில் உள்ள அயர்லாந்து மதுபானசாலைக்கு அடிக்கடி செல்லும் அதிகாரியொருவர் தான் சந்தித்த நபர் ஒருவர் குறித்து எவ்பிஐஏஜன்ட்களிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
வடஅயர்லாந்தில் ரப்பர் புல்லட்டினால் கொல்லப்பட்ட தனது மகளிற்காக பழிவாங்கப்போவதாக அந்த நபர் தெரிவித்தார் என அந்த அதிகாரி எவ்பிஐஎஜன்ட்களிற்கு தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பெப்ரவரி நான்காம் திகதி ( 1983)இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட நபர் எலிசபெத் மகாராணிக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றார், மகாராணி பயணம் செய்யும் படகின் மீது அவர் ஏதாவது பொருளை வீசலாம் அல்லது யொசெமைட் தேசிய பூங்காவிற்கு அவர் விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கொலை செய்வதற்கு முயற்சிக்கலாம் என எவ்பிஐ ஆவணம் தெரிவித்துள்ளது.
எலிசபெத் மகாராணிக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட எவ்பிஐ படகு நெருங்க கோல்டன் கேட் பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு திட்டமிட்டது என எவ்பிஐ ஆவணங்கள் தெரிவித்துள்ளன.