Home World UK News டால்பின் போல் காட்சியளிக்கும் இங்கிலாந்து துறைமுகம்

டால்பின் போல் காட்சியளிக்கும் இங்கிலாந்து துறைமுகம்

0

இங்கிலாந்தில் உள்ள துறைமுகம் ஒன்று டால்பினின் தலை போன்று காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மே மாதத்தின் ஆரம்பத்தில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்டது.

துறைமுகத்தின் அழகிய புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ரய் ஜோன்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவர், “இங்கிலாந்தில் உள்ள அந்த துறைமுகத்திற்கு நாம் பலமுறை சென்றிருந்தபோதிலும் தனித்தன்மை வாய்ந்த அதன் வடிவத்தை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்க மாட்டோம்” என்றார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version