Home India ‘நம்ம சென்னை’ செயலி மேம்பாட்டு பணி தீவிரம்

‘நம்ம சென்னை’ செயலி மேம்பாட்டு பணி தீவிரம்

0

சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு ‘நம்ம சென்னை’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், சொத்து வரி செலுத்துதல், தொழில், வர்த்தக உரிமம் விவரங்கள் அறிதல் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.

இருப்பினும், செயலியின் பல்வேறு அமைப்புகள் மாநகராட்சி வலைதளத்தில் உள்ளது போல் செயல்படவில்லை. இந்த நிலையில் செயலியை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘நம்ம சென்னை’ செயலியை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து குறைபாடுகளும் தீர்க்கப்படும். மேம்பாடு பணி முடியும் வரை பொதுமக்கள் 1913 எனும் உதவி எண்ணில் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version