Home Srilanka Elections ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – ஜனகரத்நாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – ஜனகரத்நாயக்க தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எனதுதோல்வியில்லை இது இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி இதனை பற்றி எனக்கு எந்த பிரச்சினையுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நான் முன்னரே உறுதியாக தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version